A.K.M. Ramzy / 2021 ஜூன் 21 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பயணம், டெல்லியில் பெரிதாக பேசப்பட்டது.டெல்லி தமிழ்நாடு இல்லம் பரபரப்பாக இருந்தாலும், அதிகாரிகள் 'டென்ஷன்' இல்லாமல் பணியாற்றினர்.
முதலமைச்சர் டெல்லி வருகிறார் என்றதும், தமிழ்நாடு இல்லத்தில், 'முதலமைச்சர் என்ன சாப்பிடுவார்; அவருக்கு என்ன பிடிக்கும்' என, அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டது.
முதலமைச்சர், மனைவியுடன் வந்திருந்தார். ஒரு வேளை முதலமைச்சரின் மனைவி ஏதாவது, 'மெனு' தருவாரா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால், முதலமைச்சரோ, 'எனக்கு மிகவும் எளிமையான சாம்பார் சாப்பாடு போதும். எண்ணெய் மற்றும் காரம் அதிகம் வேண்டாம்' என, கூறி விட்டாராம்.
முதலமைச்சரின் மனைவி துர்காவும் சமையல் அறை பக்கமே வரவில்லை. சமையல் விவகாரத்தில் அவர் தலையிடவே இல்லை. 'சைவ சாப்பாடே போதும்; அசைவம் எதுவும் வேண்டாம்' என்றும் சொன்னாராம் முதலமைச்சர் ஸ்டாலின்.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago