2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

“சாலையில் அமர்ந்திருக்கும் விவசாயிகளை தெரியவில்லையா ? ”

Mithuna   / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி ஞாயிற்றுக்கிழமை (25) கலந்து கொண்டார். இதில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.

இந்த யாத்திரை அம்ரோஹா, சம்பல், புலந்த்சாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது. இதில் ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றார்.

அப்போது பிரியங்கா காந்தி, “பா.ஜ.க. 10 ஆண்டாக ஆட்சியில் உள்ளது. ஜி 20 மாநாடு போன்ற பல பெரிய நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளால் நாட்டின் மரியாதை கூடுகிறது என எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் கூட ஒப்புக்கொள்கிறோம்.

நாட்டின் மரியாதையில் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்பில்லையா? இளைஞர்களுக்கு வேலை இல்லை, விவசாயிகள் இன்னும் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். பணவீக்கம் நாட்டு மக்களுக்கு சுமையாக இருக்கிறது. இதை எல்லாம் நான் சுட்டிக்காட்டி கேள்வி கேட்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .