A.K.M. Ramzy / 2021 மார்ச் 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர், தனது தோழியை தாக்கியதற்காக பொலிஸார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பொலிஸார் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் எச்சரித்தும் கேட்காமல் தனது முக கவசத்தை அகற்றி, பொலிஸை நோக்கி வேண்டுமென்றே இருமி, தகாத வார்த்தைகளும் பேசினார்.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செங் தியாம், தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 14 வாரம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .