A.K.M. Ramzy / 2021 மார்ச் 29 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலூர்:
தன்னல வாதிகளின் கையில் நாடும், அதிகாரமும் சிக்கிக்கொண்டதால்தான் தன்மானத்தை இழந்து நிற்கிறது. அடிமைத்தனமான, கேடுகெட்ட பண நாயகத்தை அழித்து புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். மக்களின் குறைகளை கேட்க நாங்கள் வரவில்லை. குறைகளை தீர்க்க வந்திருக்கிறோம்.
இவ்வாறு, கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நாம் தமிழர் கட்சியை உருவாக்கி கடமையை செய்து வருகிறோம். எங்களுக்கு வருமானம் முக்கியமல்ல. தன்மானம் தான் முக்கியம். சேவைதான் வழியை தீர்மானிக்கிறது. தமிழ் நலத்தையும், வளத்தையும் காப்பது நமது கடமை.
தமிழகத்தில் 1½ கோடி இந்திகாரர்கள் குடியேறி விட்டனர். இந்தியை திணிக்கிறது என்று போராடுகிறோம். ஆனால் அவர்கள் இந்திக்காரர்களை திணித்து விட்டார்கள். இதை யாரும் கேட்கவில்லை. நாம் தான் கேட்கிறோம்., தனி ஒருவராக கேட்போம்.
சிங்கம்போல் தனியாக களத்தில் நிற்கிறோம். எங்களுக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். இந்த மண்ணும், மக்களும் பயன்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறோம். இந்த இனம் வாழ வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
45 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago