2025 ஜூலை 24, வியாழக்கிழமை

சிறப்பு வகுப்புகள் நடத்த எதிர்ப்பு; ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சிறப்பு வகுப்புகள் நடத்த எதிர்ப்புத்  தெரிவித்து ‘தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்‘சார்பில் நேற்றுமுன்தினம்(18)   மாலை சேலத்தில்  பாரிய  கண்டன ஆர்ப்பாட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 இவ் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் அரச பாடசாலைகளில் பணிபுரியும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.  

இதன்போது அவர்கள் ”10 மற்றும் 12ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் எடுக்க கட்டாயப்படுத்துவதைத்  தவிர்க்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை நடத்த விடாமல் தொடர்ந்து தேர்வுகள் நடத்துவதை நிறுத்த வேண்டும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

அதேசமயம் ” கல்வித்துறை ஆணையரின் உத்தரவை மீறி செயல்பட்டு வரும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியைக்  கண்டித்தும் அவர்கள்  கோஷங்களை எழுப்பியிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .