2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

சிறுத்தைகளை விட்டு இந்தியா வரமாட்டேன்; வைத்தியர் பிடிவாதம்

Ilango Bharathy   / 2022 மார்ச் 08 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன்- ரஷ்யா இடையே போர்  நீடித்து வரும்  நிலையில், உக்ரேனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் உக்ரேனில் பணியாற்றிவரும் இந்தியாவைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் தான் வளர்த்து வரும் சிறுத்தைகளுக்காக உக்ரேனைவிட்டு இந்தியா வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளமை  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், தனுகுவைச் சேர்ந்த குமார் என்பவரே இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மருத்துவம் படிக்க உக்ரேன் சென்ற இவர் அங்கேயே வைத்தியராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகின்றது.

போர் சூழலில் அனைவரும் வெளியேறிய நிலையில், இந்திய தூதரகம் அவரை தொடர்பு கொண்டபோது விலங்கு பிரியரான அவர் ” டான்பாஸ் பிராந்தியத்தில் பதுங்கு குழி அமைத்து அதில் தனது சிறுத்தைகளுடன் வசித்து வருவதாகவும், சிறுத்தைகளை விட்டு இந்தியா வரமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .