2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிறுநீர் கழித்தவர் தவறை உணர்ந்தால் விடுவிக்கலாம்

Freelancer   / 2023 ஜூலை 09 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன் மீது சிறுநீர் கழித்து அவமரியாதை செய்த நபர் தவறை உணர்ந்திருந்தால் அவரை விடுவிக்குமாறு பாதிக்கப்பட்டவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா, பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதித்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பிரவேஷ் சுக்லா  கைது செய்யப்பட்டார்.

மேலும் அவருக்கு சொந்தமான வீடு பொக்லைன் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் தஷ்ரத் ராவத்தை தனது இல்லத்திற்கு அழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங், அவரிடம் மன்னிப்புக் கோரி அவருடைய கால்களை கழுவி மரியாதை செலுத்தினார்.

அதனைதொடர்ந்து, அவருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் வீடு கட்டுவதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சிறுநீர் கழித்த சுக்லா தவறை உணர்ந்ததால் அவரை விடுதலை செய்யுமாறு பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X