2025 ஜூலை 24, வியாழக்கிழமை

சிறுமி கர்ப்பம்; இளைஞருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தஞ்சை அருகே  இளைஞர் ஒருவர், 14 வயதான சிறுமியொருவரைக் கடத்திச்சென்று,திருமணம் செய்து அவரைக் கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி பகுதியைச் சேர்ந்தவர்  சேகர். 32 வயதான இவர் அப்பகுதியில் வசித்து வந்த 14 வயதான சிறுமியொருவரைக்  காதலித்து வந்துள்ளார்.

இதற்கு சேகரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி காணமற்போயுள்ளதால் அவரின் பெற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சேகர் குறித்த சிறுமியைக் கடத்திச்சென்று திருமணம் செய்து, அவருடன் தனிமையில் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், சேகர் மற்றும் அவரது பெற்றோர் உட்பட ஐவரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி  சேகரால் கர்ப்பம் அடைந்திருந்த நிலையில், அக் கர்ப்பம் கலைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 இவ்வழக்கானது  தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் சேகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய்  அபராதமும், விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் அவரது பெற்றோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், உறவினர்கள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .