2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுமி மீது 12 மணி நேரக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மராட்டிய மாநிலம், பல்கர் மாவட்டத்தைச்  சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் 8 பேர் கொண்ட கும்பலால்  சுமார் 12 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 குறித்த சிறுமி , இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், சிறுமியை அவ் இளைஞன் கடந்த 16 ஆம் திகதி ஆள்நடமாட்டமற்ற பங்களாவொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது அங்கு வந்த இளைஞர்களின் நண்பர்களும் அச்சிறுமியை தொடர்சியாக 12  மணிநேரம்  கூட்டுப்பாலியல் வன்புணர்வு  செய்துள்ளனர்  எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர்களிடம்  இருந்து தப்பித்துச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூர சம்பவம்  குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

இதனையடுத்து குறித்த இளைஞர்களைப்  போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .