2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சிறுமிக்கு பூஜை போட்டு கர்ப்பமாக்கிய பூசாரி

Freelancer   / 2022 ஜூன் 12 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்ற தாயை வாசலில் காவலுக்கு வைத்துவிட்டு சிறுமிக்கு பலான பூஜை போட்டு கர்ப்பமாக்கிய பூசாரி வசமாக சிக்கியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு முடித்துள்ள இந்த சிறுமிக்கு கடந்த சில தினங்களாக வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, அதே பகுதியில் உள்ள ஊராளி கருப்பர் கோயிலில் பூசாரி பழனி என்ற 65 வயது முதியவரிடம் சிறுமியை அழைத்துச்சென்று அவரது பெற்றோர் குறி கேட்டுள்ளனர்.

அப்போது, சிறப்பு பூஜை செய்து சிறுமியின் வயிற்று வலியை குணப்படுத்துவதாக,  பூசாரி பழனி கூறியுள்ளார். இதனை நம்பிய தாய் சிறுமியை பூசாரி பழனியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சிறுமியின் தாயிடம்,  'வீட்டுக்கு வெளியில் அமர்ந்து யாரும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நான் சிறப்பு பூஜையில் இறங்குகிறேன்' என கூறிவிட்டு, பூசாரி பழனி குறி பார்க்கும் அறையில் சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சென்ற பூசாரி பழனி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதையடுத்து,  சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பம் ஆனார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மகளிடம் விசாரித்தபோது, பூசாரியின் பலான பூஜை விபரம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாரளித்தார். இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிஸார் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோயில் பூசாரி பழனியை கைது செய்தனர்.

இதன் பிறகு கைது செய்யப்பட்ட பூசாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பத்தாம் வகுப்பு சிறுமியின் வயிற்றுவலி பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறி அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய கோயில் பூசாரியின் செயல் மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .