Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 13 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுபுர் சர்மா விவகாரத்தில் தையல்காரர் கொலை குறித்து கருத்து பதிவிட்ட மும்பை சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த காஷ்மீர் இளைஞன் கைதுசெய்யப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பா.ஜனதா முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து கூறிய கன்னையா லால் என்ற தையல்காரர் கொலை செய்யப்பட்டார்.
அவரது மரணம் குறித்து மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி முகநூலில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில் சிறுமிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை, பாலியல் மிரட்டல் விடுத்தார். அதுதொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசாரணையில் அவர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பட்காம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், அவ்விளைஞனை கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .