2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுமியின் உயிரைப் பறித்த பூச்சி

Ilango Bharathy   / 2023 ஜனவரி 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொரடாச்சேரி அருகே, பூச்சி கடித்து 3 வயதான சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கொரடாச்சேரி அருகே திட்டாணிமுட்டம், மேலத்தெருவைச் சேர்ந்தவர்  ராஜேஷ். 38 வயதான இவருக்கு வேதநாயகி என்ற மனைவி உள்ளார்.

இத்தம்பதிக்கு 3 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் அண்மையில் வீட்டில்  சிறுமி உறங்கிக் கொண்டிருந்த போது அவரை விஷப்பூச்சியொன்று கடித்துள்ளது.

 இதனால் வலி தாங்க முடியாமல் கதறியழுத அவரை அருகே இருந்த வைத்தியசாலைக்குக்  குறித்த தம்பதியினர்  அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .