2025 ஜூலை 30, புதன்கிழமை

சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுப்பு

Freelancer   / 2022 மே 12 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட சிறுமியின் 29 வார கருவை கலைக்க அனுமதி வழங்க மறுத்த மும்பை உச்ச நீதிமன்றம், சிறுமிக்கு ரூ.50,000 இடைக்கால நிவாரணம் வழங்க மராட்டிய அரசுக்கு
உத்தரவிட்டது.

கற்பழிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் தந்தை மனுவொன்றை மும்பை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அவர் மனுவில், தனது மகளின் 29 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, மாதவ் ஜாம்தார் ஆகியோா் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

இதில் நீதிபதிகள் கருவை கலைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மருத்துவ குழுவினரிடம் பரிந்துரை கேட்டு இருந்தனர்.

சிறுமியை சோதனை நடத்திய ஜே.ஜே. மருத்துவ குழுவினர், இந்த தருணத்தில் சிறுமியின் கருவை கலைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து, நீதிபதிகள் சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்க மறுத்தனர்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாய் இல்லாததால், பிரசவத்தின் போது அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கவும், மேலும் பிரசவம் வரையிலும், பிரசவம் முடிந்து தேவையான காலம் வரை காஞ்சூர்மார்க்கில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்து பார்த்து கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சிறுமிக்கு 10 நாட்களுக்குள் ரூ.50 ஆயிரத்தை இடைக்கால நிவாரணமாக வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .