2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சிறுமியை பலாத்காரம் செய்து கருமுட்டை விற்பனை

Freelancer   / 2022 ஜூன் 06 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரோட்டில் கணவன் பிரிந்து சென்றதையடுத்து,  தனது 16 வயது மகளை தாயார் வளர்த்து வந்தார். காலப்போக்கில் தாயாருக்கும் அப்பகுதியில் வசித்த பெயின்டருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் வசித்தார்.

பெயின்டரும், அப்பெண்ணும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.

மகளை, பெயின்டர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி,  எட்டு முறை கருமுட்டை விற்பனை செய்துள்ளார்.

இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த திகதி, ஆதார் அட்டை போன்றவை போலியாகத் தயாரித்து,  ஈரோடு,  சேலம், பெருந்துறை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் படி,  சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர், ஆகியோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இடம்பெற்று வந்த  கருமுட்டை விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் இருந்து டொக்டர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினர், கருமுட்டை விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஈரோடு வர இருக்கிறார்கள். 

மேலும், சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில், ஈரோடில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களும் விசாரணை வட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .