2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுவனின் உதட்டைக் கடித்த `மம்முட்டி` கைது

Ilango Bharathy   / 2023 ஜனவரி 19 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  ‘மம்முட்டி‘. 76 வயதான இவர் பள்ளூர் பகுதியில் உள்ள, தனது உறவினரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று அங்கு சென்ற மம்முட்டி ”வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 வயதுச்  சிறுவனைக்  கட்டிப்பிடித்து உதட்டை கடித்துக்  காயப்படுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுவன், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ள நிலையில், பொலிஸார் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார், மம்முட்டியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .