Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 07 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு வைத்தியர் ஒருவர் ‘பெவிக்குவிக்‘ எனப்படும் உடைந்த பொருட்களை ஒட்டப் பயன்படுத்தப்படும் பசையைத் தடவிய சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிங்கசூகூரைச் சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. இவர் தனது 7 வயது மகன் மற்றும் மனைவியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
அங்கு குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக வம்சி தன் மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு இருந்த மருத்துவர் அடிபட்ட தலையில் தையல் போடுவதை விட்டு விட்டு, ஃபெவிக்விக்கைத் தடவியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்யவே, நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அங்குள்ள மருத்துவர் மற்றும் உதவியாளர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago