Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 11 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவெண்ணெய் நல்லூரில் உள்ள கிருபாபுரீஸ்வரர் கோயிலில், முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலையாக வேண்டும் என்ற வேண்டுதலுடன் திமுகவினர் சிவபெருமானிடம் மனு கொடுத்துள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்தது. இதனால் தனது எம்.எல்.ஏ பதவியை இழந்த பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து மேல்முறையீடு மனு செய்துள்ளார்.
அதன்மீதான விசாரணை வௌ்ளிக்கிழமை (12) நடைபெற உள்ள நிலையில் இது உள்ளிட்ட பிற வழக்குகளில் இருந்து அவர் விடுதலையாக வேண்டும் என திமுகவினர் சிவன் கோயிலில் மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லுாரில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சுந்தரமூர்த்தி நாயனார் வழக்காடு மன்றம் உள்ளது. சிவபெருமானும் - சுந்தரமூர்த்தி நாயனாரும் வழக்காடிய இந்த மன்றத்தில் மனு அளித்தால் தீராத வழக்கும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.
அந்த ஐதீகத்தைத் தொடர்ந்து தங்கள் மாவட்ட அமைச்சராக இருந்த பொன்முடிக்காக இந்த கோயிலில் திமுகவினர் புதன்கிழமை (10) வேண்டுதல் செய்து மனு அளித்துள்ளனர். திருவெண்ணெய் நல்லுார் பகுதி திமுகவினர், பொன்முடி அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலையாக வேண்டும் என கோரிக்கை விடுத்து சிவபெருமானிடம் மனு அளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago