2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சுய இன்பம் செய்த நபர் கைது

Ilango Bharathy   / 2023 மே 09 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நபர் ஒருவர்  ரயிலில் சுயஇன்பம் செய்யும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்”இது அருவருப்பானதும் வேதனைத்தருவதுமாக இருக்கிறது. இந்த இழிவான செயலுக்கு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டெல்லி பொலிஸார் மற்றும் மெட்ரோ நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் கூறியிருந்தார்.

அதே சமயம் “பயணிகள் மெட்ரோவில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். சக பயணிகள் கண்டிக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் போது DMRC ஹெல்ப்லைனில் புகாரளிக்க வேண்டும்” என  மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும், மெட்ரோவில் கண்கானிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தும் விதமாக பறக்கும் படயினரை அதிகப்படுத்தவும் மெட்ரோ முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X