A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
டில்லியில் விவசாயிகள் அதிகளவு கூடுவதை தவிர்க்க தற்காலிக சுவர்கள் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல், ‛சுவர்களை கட்டாதீர்கள், பாலங்களை கட்டுங்கள்,' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், 70 நாள்களுக்கு மேலாக டில்லி எல்லையில் போராடி வருகின்றனர். அவர்களுடன், மத்திய அரசு, 11 முறை பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை. இதனையடுத்து குடியரசு தினத்தன்று, டில்லியில் விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் அதிகமான பொலிஸார் காயம் அடைந்தனர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், விவசாயிகள் மீண்டும் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க, காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் சிமெண்ட் தடுப்புகள், தற்காலிக சுவர்கள், இரும்பு தடுப்புகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்தான சில புகைப்படங்களை ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‛சுவர்களை கட்டாதீர்கள்; பாலங்களை கட்டுங்கள்,' என பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago