A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ஆம் திகதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை பொலிஸார், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. தனக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உச்ச நீதிமன்றில் ஹேம்நாத் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணையில் உள்ளது.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த அறிக்கை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 5ஆம் திகதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago