Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 23 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை, அண்ணா நகரில் செல்போனில் கேம் விளையாடிய 5 வயது மகளை அடித்த ஆத்திரத்தில், பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தம்பியை கொடூரமாக கொலை செய்து விட்டு, தப்பிசென்ற அண்ணனை பொலிஸார் கைது செய்தனர்.
சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மகன் ராசு (32). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 5 வயது மகள் உள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் ராசுவின் மகள் செல்போனில் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு போதையில் தள்ளாடியபடி வந்த ராசுவின் தம்பி சந்திரன் (20) ராசுவின் மகளிடம் எப்போதும் செல்போனில் கேம் விளையாட்டா என கேட்டு, அவளை சரமாரியாக தாக்கினர்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த ராசு, தன் மகள் கேம் விளையாடுவாள் ?என்ன வேண்டுமானாலும் செய்வாள் நீ யாருடா அடிப்பதற்கு என கேட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது.
இந்த சண்டையில், ராசு ஹாங்கரில் மாட்டி வைத்த பெல்ட்டை எடுத்து, சந்திரன் கழுத்தை பலமாக இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
புகாரின் பேரில், நொளம்பூர் பொலிஸார் சந்திரன் உடலை கைப்பற்றி, நேற்று அதிகாலை தப்பியோடிய ராசுவை கைது செய்தனர்.
மேலும், கொல்லப்பட்ட சந்திரன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
28 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
28 Jul 2025