2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சொகுசு காருக்குள் கூட்டு வல்லுறவு

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்,  ஜூப்லி ஹில்ஸ் பகுதியிலுள்ள ஒரு கேளிக்கை விடுதியில் கடந்த 28 ஆம் திகதியன்று மாலை 4 மணியளவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 17 வயது சிறுமி வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்துள்ளார்.  

விடுதியில் இருந்து வெளியே வந்த அந்த சிறுமியை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி சிறுவர்கள் உள்பட 6 பேர் சிவப்பு நிற 'பென்ஸ்' சொகுசு காரில் அழைத்து சென்றுள்ளனர்.    

பேக்கரிக்கு அழைத்துச் சென்றவர்கள், அச்சிறுமியை இன்னோவா காருக்கு மாற்றி,  மீண்டும் அழைத்துச் சென்று 6 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.அதில், ஐந்துபேர் சிறுவர்கள் ஆவர். 

மேலும், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி,  அனைத்து இந்திய மஜ்லிக் , இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் மகன்களுக்கு தொடர்பு உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) குற்றச்சாட்டி உள்ளது.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .