Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 02 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
நேற்று (02) காலை எட்டு மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது எனத் தெரிகிறது.
அதிகபட்சமாக கேரளாவில் 1,197 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மகாராஷ்டிராவில் 1,081 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இதுதவிர, புதுடெல்லியில் 368, அரியானாவில் 187, கர்நாடகாவில் 178, உத்தர பிரதேசத்தில் 124, தமிழ்நாட்டில் 139 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி பாதிப்பு உயர்ந்ததால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி பாதிப்பு அதிகரித்தாலும் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
இதேவேளை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சோனியா காந்தி, கடந்த சில நாள்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானதை தொடர்ந்து, தனிமைப்படுத்தி கொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .