2026 மார்ச் 07, சனிக்கிழமை

ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம் அமைக்கப்படும். தற்போதுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் வெறும் கண் துடைப்பு எனக் குறிப்பட்டார் ஸ்டாலின்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘தந்தி’ டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் தொடர்ந்து  கூறியதாவது:-

இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டிய கடமை எங்களுடையது. தற்போது உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

சசிகலா வருகை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால்தான், ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் அவசரமாக மூடப்பட்டிருக்கிறது.

ஒருவேளை சசிகலாவை எதிர்கொள்ள தயாராக இருந்திருந்தால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவிடத்தை மூடியிருக்கக் கூடாது. ஜெயலலிதா மீது எனக்கு அரசியல் ரீதியான விமர்சனங்கள் இருந்தாலும் அவரது தைரியமான முடிவுகள் பாராட்டுக்குரியது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்குமான அரசியல் ரீதியிலான உறவு தொடர்கிறது. கருணாநிதி மறைந்தபோது, மெரினாவில் இடம் கொடுக்குமாறு கேட்டும், தர மறுத்தது குறித்த கோபம் எனக்கு இருக்கிறது.

சட்டமன்றத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக, முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

பிரதமர் பதவி நாடி வந்தும் வேண்டாம் என மறுத்தவர் சோனியா காந்தி. நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மிகவும் பிடித்த நண்பர்.

கமல்ஹாசன் நல்ல நடிகர். பிரதமர் மோடி அருமையான பேச்சாளர். எழுச்சி வரக்கூடிய அளவுக்கு திறமையாக பேசக்கூடியவர். விஜயகாந்த் மனிதநேயம் மிக்கவர். டாக்டர் ராமதாஸ் சிறந்த போராளி. ஜெயலலிதா தைரியசாலி.

சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம். ராகுல்காந்தி இந்தியாவின் வளர்ந்து வரும் மாபெரும் தலைவர். மு.க.அழகிரி என்னுடைய அண்ணன்.இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .