A.K.M. Ramzy / 2021 ஜனவரி 07 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருச்செந்தூர்;
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்னாள் மணியம் பி.எஸ்.முத்தாண்டி ஐயர் மனைவி கோட்டை அம்மாள் (வயது 100) வயது முதிர்வு காரணமாக நேற்றுப் புதன்கிழமை காலமானார்.
இவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 1984-1989ஆம் ஆண்டில் திருச்செந்தூர் பேரூராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார்.
நெருங்கிய நட்பு கோட்டை அம்மாளுக்கு முன்னாள் முதல்வரின் இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நலனுக்காக திருச்செந்தூர் முருகனுக்கு தனது 96 வயதில் அலகு குத்தி, அந்த வேலினை சென்னையில் நேரில் சென்று வழங்கினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வந்த கோட்டை அம்மாள் வயது முதிர்வு காரணமாக புதன்கிழமை காலமானார்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago