2024 மே 02, வியாழக்கிழமை

ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய அனுமதி

Janu   / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மசூதி இருக்கும் இடம் கோவிலின் ஒரு பகுதி என்று இந்துக்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அடுத்த 7 நாட்களுக்குள் பூஜை நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஞானவாபி மசூதி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .