Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜூன் 24 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ் ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில், அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை என பிரபல வைரஸ் நிபுணர், ராயல் சொசைட்டி ஒப் லண்டனின் முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் டெல்டா வகை கண்டறியப்பட்டது.
உருமாறிய வைரஸ் வேகமாக பரவினால், தீவிர பாதிப்பை உண்டாக்கினால், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் பலனை குறைத்தால் அவற்றை கவலைக்குரிய வகை (Variant of concern) என வகைப்படுத்துவார்கள். தற்போது டெல்டா பிளஸ்ஸை மத்திய அரசாங்கம் அப்படி தான் வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அவை வேகமாக பரவுகிறது அல்லது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான தரவுகளேதும் இல்லை என ககன்தீப் கங் கூறுகிறார். அப்படி இருக்கும் போது விரைவாக முடிவுக்கு வர தேவையில்லை, அதனை உறுதிப்படுத்த உயிரியல் மற்றும் ஆய்வக தகவல்கள் தேவை என்கிறார்.
கொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு தரவுகளை அனைவரும் அணுகக் கூடிய வகையில் வைத்திருக்கும் ஒரு அமைப்பு ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி., அதில் டெல்டா பிளஸ் வகையின் 166 உதாரணங்கள் பகிரப்பட்டுள்ளன.
அவற்றின் மூலம் அசல் டெல்டாவை விட டெல்டா பிளஸ் ஆபத்தானது என்று நம்புவதற்கு தங்களுக்கு அதிக காரணம் கிடைக்கவில்லை என லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட், டொக்டர் ஜெர்மி காமில் கூறியுள்ளார். “பலவீனமானவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களிடையே வேண்டுமானால் லேசான பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் கவலைப்பட தேவையில்லை, கண்காணிப்பது நல்லது.” என கூறியுள்ளார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago