2025 மே 09, வெள்ளிக்கிழமை

டெல்லியில் கடும் பனிமூட்டம்

Mithuna   / 2023 டிசெம்பர் 27 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லி மட்டுமல்லாமல் உத்தரபிரதேசம் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களை பார்க்க முடியாது அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

மிகவும் அதிக அளவில் பனிமூட்டம் அடர்ந்து காணப்படும் என இந்திய வானிலை மையம் டெல்லிக்கு "ரெட் அலர்ட்" பிறப்பித்துள்ளது.

டெல்லியில் 25 மீட்டருக்கும் குறைவான தூரத்தைக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பதால் 25-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், 110 விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநில சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.  இதில் ஒருவர பலியானார். பெரேலியில் சரக்கு லாரி ஒன்று பெரேலி- சுல்தான்புர் நெடுஞ்சாலையில் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X