2024 மே 02, வியாழக்கிழமை

ட்ரோன் மூலம் ரத்தம் அனுப்பிய மருத்துவமனை

Janu   / 2024 ஜனவரி 31 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மருந்து, ரத்தம் ஆகியவற்றை பிற சுகாதார மையங்களுக்கு விரைவாக அனுப்பி வைக்க ஏதுவாக ட்ரோன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, முதல் ட்ரோன் சேவை மூலம்கோர்தா மாவட்டத்தில் உள்ள டாங்கி சமுதாய சுகாதார மையத்துக்கு ரத்தம் அனுப்பி வைக்கப்பட்டது.

12 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோன், 2 முதல் 5 கிலோ கிராம் வரையிலான மருந்துகளை எடுத்துச் சென்று விநியோகிக்கும் திறன் வாய்ந்தது. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் செல்லும் இதில் ஜிபிஎஸ் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மருந்து பொருட்களை குறித்த நேரத்தில் விநியோகம் செய்ய முடியும். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவனம் ட்ரோன் சேவையை வழங்குகிறது.

இதுகுறித்து எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் ரத்தம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் 60 கி.மீ. தூரத்தை 35 நிமிடங்களில் கடந்து ரத்தத்தை விநியோகம் செய்தது” என கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .