Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மே 01 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மராட்டிய மாநிலம், புனே மாவட்டம், தடிவாலா பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே. 80 வயதான இவர் நேற்றைய தினம் (30) தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து தீபக் கும்ளேவின் உடலை அவரது குடும்பத்தினர் தகனம் செய்ய அப்பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
அங்கு தகன மேடையில் தீபக் கும்ளேவின் உடல் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டதாகவும், இதன் போது உடல் சரியாக எரியவில்லை என அருகில் நின்ற ஒருவர் எரிந்துகொண்டிருந்த சடலத்தின் மீது பெட்ரோலை ஊற்றியதாகவும் இதனால் தீ வேகமாகப் பரவி, அருகில் இருந்தவர்கள் மீதும் தீ காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 11 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago