A.K.M. Ramzy / 2021 ஜனவரி 04 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் வசித்துவந்த ராம்தான் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, ராம்தானின் உறவினர்கள் அவரது உடலை தகனம் செய்வதற்காக முரத்நகரில் உள்ள இடுகாட்டு தகன மேடைக்கு கொண்டு சென்றனர்.
ராம்தானின் உடல் தகனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்துள்ளது.
மழை பெய்ததையடுத்து, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் தகன மேடை அமைந்துள்ள பகுதியில் நின்றுகொண்டிருந்தனர்.
ஆனால், தகன மேடையின் மேற்கூரை பாழடைந்து இருந்துள்ளது. அதில் புனரமைப்பு நடைபெற்றும் பாதிப்பணிகள் முடிவந்த நிலையில் இருந்துள்ளன.
இந்நிலையில், கனமழை காரணமாக அந்த தகன மேடையின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. மழை காரணமாக தகன மேடையில் நின்றுகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
இவ் விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 38பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் உத்தரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago