Ilango Bharathy / 2023 ஏப்ரல் 18 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகார் மாநிலத்தில், பெண் அதிகாரியொருவர் மணல் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் மணல் கடத்தல், கள்ளச்சாராயம் தயாரித்தல் போன்ற சட்ட விரோத செயல்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

அதேசமயம் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தடுக்க செல்லும் அதிகாரிகள், தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்களும் சில நேரங்களில் நடப்பதுண்டு.
இந்நிலையில் பீகாரில் பிஹ்தா நகரில் அண்மையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலைத் தடுக்க சுரங்கத் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரியொருவர் சென்றுள்ளார்.
அவருடன் இரு ஆய்வாளர்களும் சென்று இருந்தனர். இந்நிலையில் குறித்த பெண் அதிகாரி வருவதைப் பார்த்த சட்ட விரோத கும்பலொன்று அவரை மானபங்கம் செய்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனை அங்கிருந்த நபர் ஒருவர் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளார்.
இத் தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, குறித்த பெண் அதிகாரியைக் கொடூரமாக தாக்கிய வழக்கில் 44 பேரை ப் பொலிஸார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 minute ago
24 minute ago
24 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
24 minute ago
38 minute ago