A.K.M. Ramzy / 2021 மார்ச் 10 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரு:
இந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார்.
பெங்களூரு அப்போலோ மருத்துவமனையில் அந்நகரைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற முதியவர் தனது 77 வயது மகனுடன் வந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டார். இவர் தற்போது இந்தியாவிலேயே தடுப்பூசி பெற்ற வயதான பெண்மணி என்ற பெருமை பெற்றுள்ளார்.
மற்றொரு 103 வயது நபர் நொய்டாவில் தனது முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் அவரது வயது விவாதத்துக்குரியது என்பதால் அவரை தடுப்பூசி பெற்ற நொய்டாவின் வயதானவர் என்கின்றனர். தடுப்பூசி செலுத்தப்பட்ட 100 வயதுக்காரர்கள் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago