2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தடுப்பூசிகள் போட்டதால், டெல்டா பிளஸிலிருந்து குணமடைந்தார்

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 28 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் முதல் டெல்டா பிளஸ் தொற்று, பிகானரில் கண்டறியப்பட்டு,65 வயது மூதாட்டிக்கு இத்தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்தது, தற்போது வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கொரோனா இரண்டாம்  அலை, குறையத் தொடங்கும் இந்த சமயத்தில், கொரோனா வைரஸ் உருமாறி புதிதாக டெல்டா பிளஸ் தொற்றாக மெல்லப் பரவி, நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாட்டில் இதுவரை 50இக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் மாவட்டத்தில் முதல் டெல்டா பிளஸ் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு அந்தப் பெண்ணின் தொண்டை, மூக்கிலிருந்து சேகரிக்கப்பட்ட சளி மாதிரி ஜீனோம் சீக்குவென்ஸிங்குக்கு (மரபணு வரிசைப்படுத்துதல்) உட்படுத்தப்பட்டது. அதில் அந்தப் பெண்ணுக்கு டெல்டா பிளஸ் திரிபு பாதித்தது உறுதியானது.

ஆனால் அந்தப் பெண் முழுக்க முழுக்க அறிகுறியற்றவறவராக இருந்ததாகவும், ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் என்பதால், நோயிலிருந்து மீண்டுவிட்டதாகவும் பிகானர் தலைமை மருத்துவ அதிகாரி டொக்டர் ஓ.பி.சஹார் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X