2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

தந்தையைக் கொலை செய்து பரலுடன் புதைத்த மகன்

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை, வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (80). இவரது மகன் குணசேகரன் (55). மே மாதம் 19ஆம் திகதி குமரேசனை காணவில்லை என்று மகள் காஞ்சனா, வளசரவாக்கம் பொலிஸில் முறைப்பாடு அளித்தார். 

விசாரணையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இதனால், தந்தையை அடித்து கொன்று, சடலத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. 

அத்துடன், தந்தையின் சடலத்தை பரலில் அடைத்து, நிலத்தில் புதைத்து வைத்துவிட்டு தலைமறைவானதும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து, புதைத்து வைத்திருந்த குமரேசனின் சடலத்தை பொலிஸார் தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பொலிஸார், தலைமறைவான குணசேகரனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில், குணசேகரன் சரணடைந்தார். 

பொலிஸார் தன்னைக் கைது செய்யாமல் இருக்க, தலையை மொட்டையடித்துவிட்டு பல்வேறு கோவில்களுக்குச் சென்று தங்கி, அங்கு வழங்கிய அன்னதானத்தை சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

இதனிடையே, வளசரவாக்கம் பொலிஸார் குணசேகரனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .