A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை
அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தனி சின்னத்தில் தான் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின், தெற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம், கோவை செல்வபுரத்தில் உள்ள அரங்கில் நேற்று மாலைநடைபெற்றது.
இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் மற்றும் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில்,‘ கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.. மேற்கு பறவழிச்சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்,’’என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கூறுகையில், "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சமீபத்தில் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அனைத்து மக்களுக்கான கட்சி. தமிழகம் முழவதும் எங்கள் கட்சி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றாலும், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ஒன்று, இரண்டு இடங்களில் போட்டியிட மாட்டோம்.
அதிக இடங்களில் தான் போட்டியிடுவோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியில் மகளிரணி பொறுப்பில் உள்ள ராதிகா சரத்குமார் போட்டியிடுவார்.
40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026