Ilango Bharathy / 2023 ஏப்ரல் 10 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமையில் இருந்த பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு எரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்திய அப்பகுதியைச் சேர்ந்த சக்கூர் கான் என்பவர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார்.
பின்னர் அப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அவரை தீயிட்டு எரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் அப்பெண்ணின் கணவரின் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைமேற்கொண்ட பொலிஸார் சக்கூர் கானைக் கைது செய்துள்ளனர்.
இக்கொடூர சம்பவத்தை தொடர்ந்து, ராஜஸ்தானில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
11 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago