Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 15 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகாரின் பெகுசாராய் பகுதியில் கால்நடை மருத்துவர் ஒருவர் நோயால் பாதிக்கப்பட்ட விலங்கைப் பரிசோதிக்குமாறு அழைக்கப்பட்டு, மூவரால் கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர்கள் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் முதலானோர் நடித்திருந்த "கலாட்டா கல்யாணம்' படத்தின் பாணியில், பீகார் மாநிலத்தில் ஒருவரைக் கடத்தி, அவரது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கால்நடை மருத்துவரின் உறவினர் ஒருவர் இதுகுறித்து பேசிய போது, நள்ளிரவு 12 மணிக்கு நோயால் பாதிக்கப்பட்ட விலங்கைப் பரிசோதிக்குமாறு அழைப்பு வந்தததால் அவர் கிளம்பினார். அப்போது அவரை மூவர் கடத்திச் சென்றனர். வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்து காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்றோம்' எனக் கூறியுள்ளார்.
எனவே இப்பிரச்சினை தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என பெகுசாராய் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் முதலான மாநிலங்களில் இதுபோல மணமகன்களைக் கடத்தி வருவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.
போதிய நிதி வசதியும் சமூகப் பாதுகாப்பும் கொண்ட திருமணமாகாத இளைஞர்களை மணப்பெண் குடும்பங்கள் துப்பாக்கி முனையில் கடத்தி வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பது அப்பகுதிகளில் பலராலும் நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு, பீகாரில் இதே போன்ற நிகழ்வு ஒன்றில் பொறியியலாளர் ஒருவர் சிக்கிக் கொண்டது தேசிய அளவில் கவனம் பெற்றது.
பொகோரோ இரும்புத் தொழிற்சாலையில் இளநிலை மேலாளராகப் பணியாற்றிய 29 வயது இளைஞர் வினோத் குமார் பாட்னாவின் பண்டாரக் பகுதியில் அடித்து, வற்புறுத்தி பெண் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். மணமகனாக உடை அணிவிக்கப்பட்டு, திருமணம் வேண்டாம் என வினோத் குமார் அழும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இதன் அடிப்படையில் நடிகர்கள் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் முதலானோர் நடித்திருந்த "கலாட்டா கல்யாணம்" படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
57 minute ago
2 hours ago