Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2025 மார்ச் 18 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவினால் பாதுகாப்பு காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மார்ச் 12 முதல் கடலுக்குச் செல்வதற்கு மீன்வளத்துறையினர் தடை விதித்திருந்தனர். திருவிழா நிறைவடைந்த நிலையில், திங்கட்கிழமை (17) ராமேசுவரம் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றனர்.
இதில் கென்னடி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த சங்கர், அர்ஜுனன், தர்ம முனியாண்டி ஆகிய 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். விசைப்படகையும், 3 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படைமுகாமுக்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை (18) வவுனியா சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கடந்த ஜனவரியிலிருந்து 20 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 148 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
22 minute ago
30 minute ago