A.K.M. Ramzy / 2021 மார்ச் 16 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
ஏபிபி - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், கேரளாவில் இடதுசாரி முன்னணி அரசு மீண்டும் வென்று பினராயி விஜயன் முதல்வர் ஆவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கிவிட்டாலே கருத்துக்கணிப்புகள் வரத்துவங்கிவிடும். தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தமிழகத்தை கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் வெற்றிப்பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை ஏபிபி - சி வோட்டர்ஸ் இணைந்து நடத்தியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக., கூட்டணியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் திமுக கூட்டணி, 43 சதவீத வாக்குகளுடன் 161-169 இடங்களில் வெற்றிப்பெறும் எனவும், அதிமுக கூட்டணி 30.6 சதவீத வாக்குகளுடன் 53-61 இடங்களிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி 7 சதவீதத்துடன் 2-6 தொகுதிகளிலும், அமமுக 6.4 சதவீதத்துடன் 1-5 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 12.3 சதவீதத்துடன் 3-7 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
16 minute ago
34 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
42 minute ago
1 hours ago