A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையைத் தொகுத்துப் பார்க்கும்போது, மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிவிக்கா மலும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அளிக்காமலும், இன்றைக்கு நாட்டில் முன்னுக்கு வந்திருக்கும் விலை உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட நெருக்கடிகளுக்குத் தீர்வளிக்காமலும் பெரும் ஏமாற்றமளிக்கும் வெற்று அறிக்கையாகவே இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதானது;
''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை என்பது தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் ஏமாற்றமளிப்பதோடு, வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது.
வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கான வருவாயைப் பெருக்குவதற்கு எந்தவொரு உருப்படியான ஆலோசனைகளையும் முன்வைக்காத இந்த நிதிநிலை அறிக்கை, வரும் நிதியாண்டில் மட்டும் 12 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசாங்கம் கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளது என்பதையும் முன் மொழிந்திருக்கிறது.
கொரோனா தொற்றுக் காலத்திலும் தங்களுடைய செல்வங்களைப் பெருமளவு பெருக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரும் பணக்காரர்கள் மீது செல்வ வரி உள்ளிட்ட இதர வரிகளை விதித்து அரசு வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்று இடதுசாரிகள் தரப்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய பிறகும் மோடி அரசு அந்த திசைக்கே போகவில்லை.
அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் போராடிவரும் இந்தச் சூழ்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் உள்ளன. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago