2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தலைமுடியை உட்கொண்ட மாணவி

Ilango Bharathy   / 2021 ஜூலை 02 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத் தொற்றுப் பரவலினால் மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் முடக்கப்பட்டு  பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இதற்கு மாற்று நடவடிக்கையாக ‘நிகழ்நிலை’  கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்நிலை கல்விச் செயற்பாடுகளால் மாணவர்களுக்கு பல்வேறு உடல், உள பாதிப்புக்கள் ஏற்படுவதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்நிலை வகுப்பால் ஏற்பட்ட மனசோர்வினால் பாடசாலை மாணவியொருவர்  தலைமுடியைத்  தொடர்ந்து உட்கொண்டு வந்த சம்பவமொன்று தமிழகத்திலுள்ள விழுப்புரத்தில் இடம்பெற்றுள்ளது.



15 வயதான இம் மாணவியின்  பெற்றோர் பணிக்குச் சென்றுவரும் நிலையில், வீட்டில் பாட்டியின் துணையுடன் இருந்துள்ளார். தனிமையில் நிகழ்நிலை வகுப்புகளில் படித்து வந்துள்ளதால், அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர் மாணவியைப்  பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரின் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டறிந்து, அறுவைச்  சிகிச்சை மூலம் அதனை அகற்றியுள்ளார். இதன்போது அக்கட்டி முடியால் உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நோயினை மருத்துவத் துறையினர்  `Rapunzel Syndrome` என்று அழைக்கிறார்கள். அறுவைச்  சிகிச்சைக்கு பிறகு, இம்மாணவி மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X