A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் அரசுப் பள்ளிக்குள் வைத்து ஐந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆகஸ்ட் 2020 முதல் 7 முதல் 11 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளை பள்ளிக்குள் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) அதிகாரிகளுடன் பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட 2ம் வகுப்பு சிறுமி ஒருவர் நோய்வாய்ப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முன், 40 வயதான தலைமை ஆசிரியர், சிறுமிகளுக்கு ஆபாச படத்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் அவர்களை கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார்.
5 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
07 Mar 2026