2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’தலைவரும் செயலாளரும் நானே’

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 27 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மட்டுமல்லாது அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பணியாற்ற இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் பல மாநில நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலும்   அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுடன் தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 154 இடங்களில் மக்கள் நீதி மையம், ஓரிடத்திலும் வெற்றிகொள்ளவில்லை. கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன்,பாரதிய ஜனதா கட்சி ( பா.ஜ.க) வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோற்றார்.

2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 3.7% ஆக இருந்த அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 2.5% ஆக குறைந்தது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலை விட 2021 தேர்தலில் சுமார் 7 இலட்சம் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் குறைவாகப் பெற்றது.

"உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன், கட்சியும் இருக்கும்" என்று தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார்.  இந்நிலையில், கமல், சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்வதாகக் கூறி அக்கட்சியிலிருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறினர்.

இந்நிலையில் புதிய நிர்வாகிகளில் புதிதாக இரண்டு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள் மூன்று மாநில செயலாளர்கள், ஒரு நிர்வாக குழு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X