2025 ஜூலை 19, சனிக்கிழமை

தவறான ஊசி செலுத்தப்பட்ட 100 நாய்கள் மரணம்

Freelancer   / 2023 ஜூன் 19 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் நாய்களுக்கு  தவறான ஊசி செலுத்தப்பட்ட நிலையில் 100ற்கும் மேற்ப்பட்ட நாய்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதற்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாய் தொல்லையை  தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்

போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதிலாக தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் 3 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X