2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’தவறான செய்திகளுக்கு கடும் எச்சரிக்கை’

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 30 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

தவறான செய்திப் பரவலைத் தடுப்பது தொடர்பாக, நேரில் ஆஜரான 'பேஸ்புக்' மற்றும் 'கூகுள்' நிறுவன அதிகாரிகளிடம், 'சட்ட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்' என,பாராளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. .

சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான செய்தி பரவலைத் தடுத்தல் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, காங்கிரஸ்  - எம்.பி., சசிதரூர் தலைமையில் தகவல் தொடர்பு துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழு சார்பில், 'பேஸ்புக்' மற்றும் 'கூகுள்' நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 'சம்மன்' அனுப்பப்பட்டு இருந்தது.

இதையடுத்து, பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா பிரிவுக்கான பொது கொள்கை இயக்குனர் சிவ்நாத் துக்ரால் மற்றும் பொது ஆலோசகர் நம்ரதா சிங் நிலைக்குழு முன் நேரில் ஆஜராகினர்.

கூகுள் சார்பில் இந்தியாவிற்கான அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கை பிரிவின் தலைவர் அமன் ஜெயின், சட்ட இயக்குனர் கீதாஞ்சலி துக்கால் ஆகியோர்   நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X