2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தாஜ்மகாலில் மாலத்தீவு ஜனாதிபதி

Editorial   / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு 4 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 6-ந்திகதி இந்தியா வந்தார். மனைவி சஜிதாவுடன் விமானம் மூலம் புதுடெல்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார். அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்வு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து முகமது முய்சு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாலத்தீவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு முகமது முய்சு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முகமது முய்சு இந்தியாவிற்கு வந்திருந்தார்.

 

இந்நிலையில், முகமது முய்சு தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மகாலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்தார். அவரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சார்பில், மாநிலம் மந்திரி யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார். தொடர்ந்து தனது மனைவியுடன் தாஜ்மகாலை பார்வையிட்ட முகமது முய்சு, அங்கு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு தாஜ்மகாலில், இன்று (11)  காலை 8 மணிக்கு விதிக்கப்பட்ட  சுற்றுலா பயணிகளுக்கான தடை, காலை 10 மணிவரையிலும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.

தாஜ்மகாலை பார்வையிட்ட பிறகு முகமது முய்சு பார்வையாளர்கள் புத்தகத்தில், "தாஜ்மகாலின் மயக்கும் அழகை வர்ணிப்பது கடினம். வார்த்தைகள் இதற்கு நியாயம் சேர்க்காது. இதன் கட்டிட நுணுக்கம், விரிவான வேலைப்பாடுகளும் காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்" என்று எழுதியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X