Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 03 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாமக்கல்லில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 72 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்த குற்றத்திற்காக முதியவரின் பேரன் பகவதி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர் பகவதி என்பவர் சமீபத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார். இதை தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு சாப்பிட கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட அவர்கள் இருவருக்கும், உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவை பரிசோதனை செய்ததில், அதில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சண்முகம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். தாய் நதியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த விசாரணையில், பகவதிதான் அந்த உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துள்ளார் என தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தவறான பழக்கங்களுக்கு அடிமை ஆகியுள்ளமையும், இதனை தாயும், தாத்தாவும் தொடர்ந்து கண்டித்து வந்ததால், கோபடைந்த அவர் தான் வாங்கி வந்த உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தமை யும் தெரியவந்தது.
இந்நிலையில் பொலிஸார், பகவதியின் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago