2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

தாயை ஏற்றாமல் சிறுமியுடன் பறந்த பஸ்

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரூர் அருகே தாயை ஏற்றாமல் சிறுமியுடன் அரச பஸ்ஸை, இயக்கிய ஓட்டுநர்,  நடத்துநர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு,  பஸ்தரிப்பிடத்தில் கடந்த திங்கட்கிழமை நின்றுக்கொண்டிருந்த பெண்ணொருவர்,  சிறுமியுடன் பஸ்ஸில் ஏறுவதற்கு முற்பட்டுள்ளார். 

சிறுமி ஏறியதுமே ஓட்டுநர் பஸ்ஸை எடுத்ததால், பஸ்ஸூக்குள் இருந்த சிறுமி அம்மா, அம்மா எனக் கதறியுள்ளார்.

சிறுமியின் தாயும் குழந்தை,  குழந்தை என்று கத்திக்கொண்டே பஸ்ஸின் பின்னால் துரத்திச் சென்றுள்ளார். எனினும், ஓட்டுநர் பஸ்ஸை வேகமாக செலுத்தியுள்ளார்.  

இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் 2 சக்கர வாகனங்களில் பஸ்ஸை துரத்திச் சென்று ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   

மேலும், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண அனுமதி வழங்கியதில் இருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பெண்களை மிக இழிவாக நடத்துவதாகவும், ஆகையால் தங்களுக்கு இலவச பயணமே வேண்டாம் எனவும் பெண்கள் தெரிவித்தனர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .