2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தாயைக் கொன்று, உடலை ஆற்றில் வீசிய மகன்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 நபர் ஒருவர் தனது தாயைக் கொன்று, உடலை ஆற்றில் வீசிய  கொடூர சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது.

மராட்டிய மாநிலம், ராய்காட் மாவட்டத்தில், கல்பதரு பகுதியில் 74 வயதான மூதாட்டியொருவர் தனிமையில்  வசித்து வந்துள்ளார்.

 இந்நிலையில் நீண்ட நாட்களாக குறித்த மூதாட்டியைக் காணவில்லை என அப்பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, மூதாட்டியின்  தொலைபேசி சிக்னல் அவரது மகனது  வீட்டுக்கு அருகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார், இது குறித்து அவரது மகனிடம் மேற்கொண்ட தீவிர  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அண்மையில் சொத்தினைப் பிரிப்பது தொடர்பாக தனக்கும் தனது தாய்க்கும்  வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனைால் ஆத்திரமடைந்து தனது தாயின் தலையை பல முறை பேஸ்போல் மட்டையால் தாக்கியதாகவும், இதில்  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும், இதனையடுத்து அவரது உடலை ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .